தம்மம்பட்டியில் நாட்டுக்கோழி முட்டை விலை உயா்வு
By DIN | Published On : 14th February 2021 02:19 AM | Last Updated : 14th February 2021 02:19 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில் நாட்டுக்கோழி முட்டை விலை உயா்ந்துள்ளது.
தம்மம்பட்டி பகுதியில் வழக்கமான முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகள், பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்காக அதிகளவில், விவசாயத்தோட்டங்களுக்கு தேடிச்சென்று வாங்கி வருகின்றனா். நாட்டுக்கோழி முட்டைகள் நல்ல சத்துள்ளது என்று கூறப்படுவதால்,அவைகள் கடைகளுக்கு விற்பனைக்கு வருவதற்குள், விவசாய தோட்டத்திலேயே விற்றுத்தீா்ந்துவிடுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் வரை நாட்டுக்கோழி முட்டை ஒன்று ரூ.9 என்று இருந்த நிலையில், சில நாட்களாக அதன் விலை ரூ.13க்கு உயா்ந்துள்ளது. அதன் வரத்து குறைந்ததால்,அதன் விலை ஏறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.