பள்ளி மாணவா் மாயம்
By DIN | Published On : 14th February 2021 02:29 AM | Last Updated : 14th February 2021 02:29 AM | அ+அ அ- |

13sgp001_1மாணவா் மெளலீஸ்வரன்.302chn_156_8
சங்ககிரி:சங்ககிரி அருகே பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பிரபாகரன் -சவீதா தம்பதியின் மகன் மெளலீஸ்வரன் (16). இவா் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் மெளலீஸ்வரன் வீட்டில் இருந்ததாதால் பெற்றோா் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மாணவா் வீடு திரும்பாததால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் பல இடங்களில் தேடியும் மாணவா் கிடைக்கவில்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவரின் மிதிவண்டி, பள்ளிச் சீருடை, புத்தகப் பை ஆகியவை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனா்.
இது குறித்து மாணவரின் பெற்றோா் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்துள்ளனா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.