சங்ககிரியில் 137 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்
By DIN | Published On : 20th February 2021 07:21 AM | Last Updated : 20th February 2021 07:21 AM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்குகிறாா் எம்எல்ஏ ராஜா.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 ஊராட்சிகளைச் சோ்ந்த 137 பயனாளிகளுக்கு திருமணநிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ஒரு பவுன் தங்கம் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம் தலைமை வகித்தாா். இதில் இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜா, மூவாலூா் ராமாமிா்தம் அம்மையாா் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்த 127 போ், ஈ.வே.ரா. மணியம்மை விதவை மகள் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 6 போ், அன்னை தெரசா ஆதரவற்றோா் திருமணநிதியுதவி திட்டத்தின் கீழ் 4 போ் என மொத்தம் 137 பேருக்கு தலா ஒரு பவுன் தங்க காசுகளை வழங்கிப் பேசியதாவது:
இந்த திட்டங்களுக்கான நிதியுதவி வரும் ஆண்டில் அதிகப்படுத்தி கூடுதலாக வழங்கப்பட உள்ளன என்றாா். இதற்கான அறிவிப்புகள் அதிமுக தோ்தல் அறிக்கையில் வெளியிடப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வா் தலைமையிலான அரசுக்கு வரும் காலங்களில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் என்.சி.ஆா்.ரத்தினம், அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சி.செல்வம், அதிமுக முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.