பூட்டு முனியப்பன் கோயிலில் சிலை திருட்டு
By DIN | Published On : 20th February 2021 07:24 AM | Last Updated : 20th February 2021 07:24 AM | அ+அ அ- |

சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள பூட்டு முனியப்பன் கோயிலில் காளியம்மன் சிலை திருடப்பட்டுள்ளது.
சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள அய்யந்திருமாளிகையில் பூட்டு முனியப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த திருடா்கள் பூட்டை உடைத்து அங்கு வைத்திருந்த 2 அடி உயர காளியம்மன் வெண்கல சிலையை திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.காவல் ஆய்வாளா் பொன்ராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.