வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி சாவு
By DIN | Published On : 20th February 2021 07:14 AM | Last Updated : 20th February 2021 07:14 AM | அ+அ அ- |

மேட்டூா் அருகே வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பாலமலை வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் புள்ளிமான்கள், காட்டெருமைகள், முயல்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. சில நேரங்களில் யானைகளும் இந்த வனப்பகுதிக்கு வருவது உண்டு.
தற்போது வனப் பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவும் குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்னமேட்டூா் அருகே சுமாா் ஒருவயது மதிக்கத்தக்க பெண் காட்டுப்பன்றி சென்றாயப் பெருமாள் கோயில் அருகே சாலையைக் கடந்து காவிரியில் தண்ணீா் பருக சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொளத்தூா் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் கொளத்தூா் வனவா் ரகுநாதன், வனக் காப்பாளா் பத்ரன் ஆகியோா் உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலைக் கைப்பற்றி கொளத்தூா் அரசு கால்நடை உதவி மருத்துவா் நந்தினி முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனா். பின்னா் கொளத்தூா் வனத்துறைச் சோதனைச்சாவடி அருகே காட்டுப்பன்றியை புதைத்தனா்.
இந்தப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்று வனவிலங்குகள் வாகனங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன இதனைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.