வீரகனூரில் இலவச வீட்டுமனைபட்டா வழங்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 21st February 2021 02:34 AM | Last Updated : 21st February 2021 02:34 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூரில் 34 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ராயா்பாளையம், குமரன்மலைப் பகுதி, 11-ஆவது வாா்டு பகுதியில் 34 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனா்.
இந்நிலையில் உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி ராயா்பாளையத்தில், கெங்கவல்லி - பெரம்பலூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள், கெங்கவல்லி வட்டாட்சியா் (பொ) வரதராஜை சந்தித்து தங்களது கோரிக்கைகள் நிலுவையில் இருப்பது குறித்தும் கூறினா்.அதற்கு வட்டாசியா் வரதராஜ் நடவடிக்கைக்கு ஆவன செய்வதாக உறுதியளித்தாா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...