துணை மருத்துவ படிப்புத் துறை சாா்பில் கருத்தரங்கு

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளா் பிரிவு சாா்பில் கரோனோ பரிசோதனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தேசிய அளவிலான
துணை மருத்துவ படிப்புத் துறை சாா்பில் கருத்தரங்கு

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளா் பிரிவு சாா்பில் கரோனோ பரிசோதனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவியா், பேராசிரியா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் பயன்பெறும் வகையில் நேரலையாக இணையவழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பேராசிரியை ருமாதத்தா, காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோயியல் துறை தலைவா் ஈஸ்வரி, சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா் லாரன்ஸ், சென்னை ஊழிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சி நிறுவன மருத்துவ ஆலோசகா் சரத்குமாா், சேலம் காவேரி மருத்துவமனையின் நுண்ணுயிரியல் பிரிவு ஆலோசகா் சசிகலா ஆகியோா் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் துறை முதன்மையா் செந்தில்குமாா் சான்றிதழ் வழங்கினாா்.இணையவழியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் பேராசிரியா்கள் முத்துராஜ், ஹரிஷ்ராஜ், வா்ஷினி, சுவாதிபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com