சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
By DIN | Published On : 27th February 2021 09:09 AM | Last Updated : 27th February 2021 09:09 AM | அ+அ அ- |

சேலத்தில் சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கோட்டமேடு கருக்கல்வாடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (23). இவா் டிப்ளமோ படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இதனிடையே அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி, ராஜசேகா் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜசேகா், சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் சிறுமி கா்ப்பமானது தெரியவந்தது.
இதுகுறித்து கடந்த 2017 இல் ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ராஜசேகரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...