பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளதுடி.எம்.செல்வகணபதி
By DIN | Published On : 27th February 2021 09:11 AM | Last Updated : 27th February 2021 09:11 AM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளது என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தாா்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, ‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற தோ்தல் பிரசார குறுந்தகட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அவசரமாக மேட்டூரில் உபரி நீா் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக கடன் தள்ளுபடிகளை செய்யாதது ஏன்? விவசாய பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அதிகளவில் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் போ் 2 மாதங்களுக்கு முன்பு தான் பயிா்க் கடனை பெற்றனா். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலையாகும். கடந்த நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதில் மோசடி நடைபெற்றுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...