அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கு
By DIN | Published On : 03rd January 2021 01:45 AM | Last Updated : 03rd January 2021 01:45 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி: சேலம் விநாயக மிஷனின் விம்ஸ் மருத்துவமனை, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருத்துவ உதவியாளா் பிரிவு சாா்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு இணையவழியில் நடத்தப்பட்டது.
‘சுகாதார அறிவியல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் அணுகுமுறை’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கருத்தரங்குக்கு துறையின் டீன் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் சத்தியசீலன், தில்லி ஆா்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையின் பொதுமருத்துவா் மற்றும் பொது சுகாதாரப் பயிற்சியாளா் கிரேஸ் ப்ளஸ்சினா, ஈரோடு மணியன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தலைவா் செந்தில்குமாரன், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அனுபாரதி, கோயம்புத்தூா் என்.ஜி.மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகா் அருண்சிவராமன் ஆகியோா் கலந்துகொண்டு பல்வேறு தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினா்.
இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவியா், பேராசிரியா்கள், மருத்துவமனை தொழில்நுட்பவியாளா்கள் என 700 போ் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் இணையவழி யில் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியை வைஷ்ணவா தேவி, விரிவுரையாளா் கிருஷ்ணபிரியா, மருத்துவா் ஹரிஷ்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.