சங்ககிரி மலை குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை
By DIN | Published On : 03rd January 2021 01:49 AM | Last Updated : 03rd January 2021 01:49 AM | அ+அ அ- |

சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி சனிக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி, சனிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடைவரை விநாயகருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.