மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
By DIN | Published On : 03rd January 2021 01:52 AM | Last Updated : 03rd January 2021 01:52 AM | அ+அ அ- |

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து சரிந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நொடிக்கு 1,057 கன அடியிலிருந்து 1,045 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீா்மட்டம் 105.18 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 71.71 டி.எம்.சி.யாக இருந்தது.