சேலத்தில் 46 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th January 2021 04:30 AM | Last Updated : 04th January 2021 04:30 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 12 போ், கொங்கணாபுரம்-1, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 3, சங்ககிரி- 2, வீரபாண்டி- 4, அயோத்தியாப்பட்டணம்- 1, பனமரத்துப்பட்டி- 2, வாழப்பாடி- 3, நரசிங்கபுரம்- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, தருமபுரி- 5, கிருஷ்ணகிரி -3, ஈரோடு- 2) என 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 56 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,703 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 30,920 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 321 போ் சிகிச்சையில் உள்ளனா்; 462 போ் உயிரிழந்துள்ளனா்.