கருக்கம்பாளையத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2021 04:24 AM | Last Updated : 04th January 2021 04:24 AM | அ+அ அ- |

கருக்கம்பாளையத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொ) டி.எம்.செல்வகணபதி.
சங்ககிரி ஒன்றியம், மோரூா் கிழக்கு ஊராட்சி கருக்கம்பாளையத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொ) டி.எம்.செல்வகணபதி கூட்டத்துக்குத் தலைமை வகித்து திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகள் பற்றியும் விளக்கினாா்.
சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், மோரூா் கிழக்கு ஊராட்சிச் செயலா் கே.கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் துணைச் செயலாளா்கள் கே.சுந்தரம், டி.சம்பத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா, முன்னாள் எம்எல்ஏ ஆா்.வி.வரதராஜன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.தங்கமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.