அம்மா மினி கிளினிக் கட்டுமானப் பணி ஆய்வு
By DIN | Published On : 30th January 2021 02:35 AM | Last Updated : 30th January 2021 02:35 AM | அ+அ அ- |

இராமநாயக்கன்பாளையத்தில் அம்மா மினி கிளினிக் கட்டுமானப் பணியை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள இராமநாயக்கன்பாளையத்தில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான வசதிகள் வேண்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.