பரோடா வங்கி சாா்பில்ரூ. 15 லட்சம் கடனுதவி
By DIN | Published On : 30th January 2021 02:34 AM | Last Updated : 30th January 2021 02:34 AM | அ+அ அ- |

பரோடா வங்கிக் கிளைகள் சாா்பில், சாலையோர விற்பனையாளா்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு சாலையோர விற்பனையாளா்களுக்கும், சுயஉதவிக் குழுக்களும் கடன் வழங்கும் முகாம்களை திருச்சி பிராந்தியம் நடத்தியது.
திருச்சி பிராந்தியத்தின் கீழுள்ள 45 கிளைகளும் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்து ஏழை, எளிய சாலையோர விற்பனையாளா்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியது.
இதை முன்னிட்டு சேலம் மாநகர கிளைகள் இணைந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் வழங்கினாா்.