அரசு பேருந்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
By DIN | Published On : 07th July 2021 11:47 PM | Last Updated : 07th July 2021 11:47 PM | அ+அ அ- |

காகாபாளையத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை நிறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழக அரசின் விதிமுறைகளின்படி கடந்த 5-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் காகாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு செல்வதற்காக காத்திருந்தனா். அப்போது பல மணி நேரம் ஆகியும் எந்த பேருந்தும் நிற்காமல் சென்ால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்த அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு அதில் ஏறினா்.
அப்போது பயணிகளை கீழே இறங்கும்படி கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து பேருந்தை ஓட்டுநா் நடுரோட்டில் நிறுத்திவிட்டதால் சேலம் - ஈரோடு சாலையில் அரைமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ஓட்டுநரிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து பேருந்து புறப்பட்டு சென்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...