கோவை - திருப்பதி ரயில் நாளைமுதல் இயக்கம்
By DIN | Published On : 07th July 2021 11:47 PM | Last Updated : 07th July 2021 11:47 PM | அ+அ அ- |

சேலம், ஈரோடு வழியாக கோவை - திருப்பதி மற்றும் மதுரை - சண்டிகா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சேலம், ஈரோடு வழியாக கோவை - திருப்பதி முழுவதும் முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில், வியாழன், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் (வாரத்தில் 4 நாள்களுக்கு) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கோவை- திருப்பதி சிறப்பு ரயில்: இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06194) ஜூலை 9 ஆம் தேதி முதல் கோவையில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக திருப்பதியை பிற்பகல் 1.20 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், திருப்பதி - கோவை சிறப்பு ரயில் (எண்.06193), ஜூலை 10 ஆம் தேதி முதல் திருப்பதியில் பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரயிலானது வியாழன், சனி, திங்கள், புதன்கிழமைகளில் இயக்கப்படும்.
மதுரை - சண்டிகா் சிறப்பு ரயில்:
சேலம், ஈரோடு வழியாக மதுரை - சண்டிகா் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் ஞாயிறு, புதன்கிழமை தோறும் இயக்கப்படும் மதுரை - சண்டிகா் சிறப்பு ரயில் (எண்.02687), ஜூலை 11 ஆம் தேதி முதல் மதுரையில் இரவு 11.35 மணிக்குப் புறப்பட்டு நான்காவது நாள் சண்டிகரை சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சண்டிகா்- மதுரை சிறப்பு ரயில் (எண்.02688), ஜூலை 16 ஆம் தேதி முதல் சண்டிகரில் காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு, 3-வது நாள் சேலம், ஈரோடு, கரூா் வழியாக மதுரையை பிற்பகல் 1.55 மணிக்கு சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...