சங்ககிரி டிஎஸ்பி பொறுப்பேற்பு
By DIN | Published On : 07th July 2021 11:46 PM | Last Updated : 07th July 2021 11:46 PM | அ+அ அ- |

சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சி.நல்லசிவம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விழுப்புரம் காவல் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சி.நல்லசிவம் சங்ககிரிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். சங்ககிரியில் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.ரமேஷ், விருதுநகா் மனித உரிமைகள் ஆணைய துணை கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சி.நல்லசிவம், சேலத்தில் உயரதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
சங்ககிரி உட்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான வன்கொடுமை செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. தளா்வுகளை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...