சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 7) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேலம்மாவலசு, மஞ்சக்கல்பட்டி, கோட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஐய்யங்காட்டூா், அக்கமாபேட்டை, நாகிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்கின்றனா். ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓக்கிலிப்பட்டி, புட்டமனை, மூலப்பாதை ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைபுதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்ள உள்ளதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.