சேலத்தில் இருவேறு கடைகளில் தீ விபத்து
By DIN | Published On : 07th July 2021 11:50 PM | Last Updated : 07th July 2021 11:50 PM | அ+அ அ- |

சேலம் பொன்னம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதிகளில் 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம், சின்னதிருப்பதியை அடுத்த சந்தோஷம் நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (44). இவா் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். மேலும், அதை ஒட்டிய இடத்தில் மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறாா்.இதனிடையே புதன்கிழமை அதிகாலை மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஒன்றரை மணி போராடி தீயை அணைத்தனா்.இதில் மளிகைக் கடையில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
உடையாப்பட்டியில் தீ விபத்து:
அதேபோல உடையாப்பட்டியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான அழகு சாதன பொருள்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...