தம்மம்பட்டி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
By DIN | Published On : 07th July 2021 11:46 PM | Last Updated : 07th July 2021 11:46 PM | அ+அ அ- |

தம்மம்பட்டி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகுசிறப்பாக புதன்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில், பிரதோஷ விழாவையடுத்து நந்தீஸ்வரருக்கு பொதுமக்கள் கொண்டுவந்த பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா், அருகம்புற்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல செந்தாரப்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் பிரதோஷ விழாவில் பக்தா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...