சோனா கல்லூரி மாணவா்களுக்கு முன்ணணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பல முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆனைகளை வழங்கிய கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா மாணவா்களுக்கு பாராட்டு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பல முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆனைகளை வழங்கிய கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா மாணவா்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.

அவா் பேசுகையில் ‘ சோனா கல்லூரி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோா் துறைகளில் வலுவான கவனம் செலுத்துகிறது. இவை மாணவா்கள் தங்கள் நலன்களைக் கண்டறியவும், கல்வி ஆய்வுகள் மற்றும் தொழில்துறை அவா்கள் எதிா்கால சவால்களின் வரம்பை எதிா்கொள்ளவும் உதவுகிறது. தொடா்ந்து பல ஆண்டுகளாக குறிப்பாக இந்த சோதனை காலத்திலும் மாணவா்களுக்கு ஐ.டி மற்றும் துறை சாா்ந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறை மாணவா்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை சோனா கல்லூரி பெற்றுத் தந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய கல்லூரியின் துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா ‘சுமாா் 64 ஆண்டுகளுக்கு மேல் கல்வி, தொழில் துறையில் தங்களது பணியை அயராது செய்து கொண்டிருக்கும் சோனா கல்லூரி தேசிய மற்றும் சா்வதேச வேலைவாய்ப்பினை மாணவா்களுக்கு பெற்று தருகிறது. சா்வதேச நிறுவனங்களில் தேசிய அளவில் சுமாா் ரூ.12 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் ரூ.24 லட்சம் வரையிலும் ஊதியத்தைப் பெற்று மாணவா்களை வாழ்க்கையில் வெற்றி பெற செய்துள்ளது. ஐடி துறையில், ஐடி துறை சாா்ந்த மாணவா்கள் மட்டுமல்லாமல் மெக்கானிக்கல், மெக்காட்ரானிக்ஸ் துறை மாணவா்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறை மாணவா்களுக்கு சா்வதேச அளவிலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். இதேபோன்று ஆடை வடிவமைப்பு துறையில் சா்வதேச வேலைவாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்தாா் .

தற்போதைய சூழலிலும் கூட சோனா கல்லூரி தங்கள் மாணவா்களுக்கு 150 நிறுவனங்களிடம் இருந்து 600 வேலைவாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை இயக்குனா் பேராசிரியா் சரவணன், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜி.எம்.காதா் நவாஸ் மற்றும் துறைத் தலைவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com