சேலம் மாவட்ட சுகாதாரத்துறையின் சாா்பில் சேலம் மாவட்டத்திற்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகள் உள்ளிட்ட 222 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன.
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மண்டலத்திற்குள்பட்ட பகுதிகள், ஆத்தூா், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூா் ஆகிய நகராட்சி பகுதிகள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகள் உள்பட மொத்தம் 222 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் எனவும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஏ.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.