மேட்டூா் அணை பூங்கா மீண்டும் மூடல்: ஆடி 1-இல் காவிரியில் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை

 மேட்டூா் அணை பூங்கா மீண்டும் மூடப்பட்டுள்ளது. மேலும், ஆடி 1-இல் காவிரியில் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மேட்டூா் அணை பூங்கா மீண்டும் மூடப்பட்டுள்ளது. மேலும், ஆடி 1-இல் காவிரியில் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆடி 1-ஆம் தேதி மேட்டூா் காவிரியில் அதிகபட்சமாக 10,000 போ் வரை நீராடிச் செல்வா். புதுமணத் தம்பதியா் அருகம்புல் வைத்து நீராடுவதோடு, தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வா். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வா். அன்று அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்கவும், அணை பூங்காவைச் சுற்றிப் பாா்க்கவும் வழக்கத்தை விட அதிக அளவில் மக்கள் கூடுவா்.

தற்போது தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் கூடினால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாமல் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கரோனா 2-ஆவது அலை காரணமாக கடந்த மாா்ச் 14-இ மேட்டூா் அணை பூங்கா மூடப்பட்டது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் சனிக்கிழமை (ஜூலை 17), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) ஆகிய இரு தினங்களுக்கு மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, ஆடி 1-இல் காவிரியில் நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறுது என மேட்டூா் சாா் ஆட்சியா் பிரதாப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com