மேட்டூர் அணையின் பாசன கால்வாயில் இளைஞர் சடலம்
By DIN | Published On : 19th July 2021 10:54 AM | Last Updated : 19th July 2021 10:54 AM | அ+அ அ- |

மேட்டூர் அணையின் பாசன கால்வாயில் இளைஞர் சடலம்.
மேட்டூர் அணையின் பாசன கால்வாயில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சசிதரன்(23) கூலித்தொழிலாளி. இன்று காலை இவர் ரத்த காயங்களுடன் காவிரி கிராஸ் அருகே மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாயில் இறந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் இருப்பதால் யாரேனும் அடித்துக்கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசினார்களா?
அல்லது மதுபோதையில் 20 அடி ஆழமுள்ள கால்வாயில் விழும்போது தலையில் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு பாசன கால்வாயில் ரத்த காயங்களுடன் இளைஞர் செத்து கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.