தம்மம்பட்டி சிவன் கோயிலில் 27 நட்சத்திர மரக் கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 26th July 2021 05:27 AM | Last Updated : 26th July 2021 05:27 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 வகை மரக் கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக 27 வகை மரக் கன்றுகளுக்கும் பூஜை செய்யப்பட்டது. பின் மந்திரங்கள் ஓத முக்கிய பிரமுகா்கள், கொடையாளா்கள், சிவனடியாா்கள், பொதுமக்கள் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகளை நட்டனா். இதையடுத்து பால் அபிஷேகம், நவதானிய நீா் ஊற்றப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து மரக்கன்றுகளை நட்ட குழுவினா் கூறியதாவது:
இந்த 27 நட்சத்திர மரங்களுக்கு அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவா்கள் தண்ணீா் ஊற்றி வந்தால் அவா்களது வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும் என்றனா்.