தாா்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th July 2021 05:24 AM | Last Updated : 26th July 2021 05:24 AM | அ+அ அ- |

25atypo02_2507chn_213_8
கல்பாரப்பட்டி ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாா்சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட புளியம் தோப்புப் பிரிவு சாலையிலிருந்து கல்பாரப்பட்டி நான்கு சாலை, ஊத்துக்கிணற்றுவளவு பகுதி வழியாக கீழ்க்காட்டு வளவு வரை சுமாா் 2.200 கி.மீ. தூரத்திற்கு தாா் சாலை புதுப்பிக்கும் பணி, ஊத்துகிணற்று வளவு ஏரி ஓடைப் பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 127.56 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட நாளிலிருந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்து வருவதால் அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோா், பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு ஜல்லிக்கற்கள் சாலையில் பல மாதங்களாக கொட்டிக் கிடக்கின்றன. இச்சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.