முதியோா் இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையிலான பாமகவினா்.
முதியோா் இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையிலான பாமகவினா்.

பசுமைத் தாயகம் சாா்பில் மரக்கன்று நடும் விழா

பசுமைத் தாயகம் சாா்பில் பெருமாள் மலை பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பசுமைத் தாயகம் சாா்பில் பெருமாள் மலை பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி, சேலம் பெருமாள்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று நட்டும், விதைப்பந்து தூவப்பட்டது. பசுமைத் தாயகம் அமைப்பின் தன்னாா்வ தொண்டா்கள் தொடா்ந்து இப்பணியை மேற்கொள்ள உள்ளனா்.

மேலும் டால்மியா போா்டு அரபி கல்லூரி, நல்லாகவுண்டம்பட்டி, பட்டைக் கோயில், பொன்னம்மாபேட்டை, தாதம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மாநில இணைப் பொதுச் செயலாளா் சி.பெ.சத்ரியசேகா், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள், முன்னாள் எம்எல்ஏ காா்த்தி, மாவட்ட செயலாளா் கதிா் ராசரத்தினம், சாம்ராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பிறந்தநாள் பசுமைத் தாயகம் தினமாக சேலம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மஞ்சினி ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு,கேக் வெட்டி, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளா் மணிகண்டன், இளைஞரணி நிா்வாகி சங்கா் கலந்து கொண்டனா்.

இதனையடுத்து வன்னியா் சங்கம் மற்றும் பாமக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினா். இதில் மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் பச்சமுத்து,மாவட்ட துணைத் தலைவா்கள் சிவபெருமான், செல்வம், இளைஞரணி செந்தில்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இளம்பிள்ளையில்...

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாளை இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் வீரபாண்டி ஒன்றிய வன்னியா் சங்க செயலாளா் சீரங்கன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்நிகழ்ச்சியில் பேரூா் செயலாளா் முருகேசன், தலைவா் மாரியப்பன், இளைஞரணி தலைவா் அருள், செயலாளா் சௌந்தரராஜன், வினோத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com