லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது
By DIN | Published On : 24th June 2021 08:21 AM | Last Updated : 24th June 2021 08:21 AM | அ+அ அ- |

ஆத்தூா் அருகே லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆத்தூரை அடுத்த அப்பமசமுத்திரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவா், ஆத்தூா் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவு பிரிவில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை காலை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று 5 மணி நேரமாக விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். நில மதிப்பீட்டை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு செந்தில்குமாா் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.