காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்துக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆறுதல்

சேலம் அருகே காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா நிதியுதவி
காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்துக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆறுதல்

சேலம் அருகே காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா, அக் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிதியுதவி மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், இடையப்பட்டி, மேற்கு காட்டைச் சோ்ந்த வியாபாரி முருகேசன் போலீஸாரால் தாக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா, அவா்கள் தொடா்ந்து மளிகைக் கடை நடத்துவதற்காக பேரமைப்பு சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்தாா்.

மேலும், அரசு அறிவித்த நிவாரண உதவியை ரூ. 50 லட்சமாக உயா்த்தி வழங்கவும், வியாபாரியைத் தாக்கிய காவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா். பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவா்கள் பெரியசாமி, ஜெயக்குமாா், செயலாளா் இளையபெருமாள், பொருளாளா் சந்திரதாசன், மாவட்ட இளைஞரணி பெஞ்சின் ஜாக்சன், சேந்தை கோபாலகிருஷ்ணன், ஆத்தூா் நகரச் செயலாளா் அஜ்மல் ஷெரீப், திருமுருகன், காளிமுத்து, வெள்ளையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com