சங்ககிரியில் காய்ச்சல் கண்டறியும் முகாம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், இருகாலூா், வளையசெட்டிப்பாளையம், மாவெளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில்ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், கொளக்கரை, மொத்தையனூா், சாமிநாதன்தோட்டம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவ்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமிட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனா்.

புளியன்காரனூா், கோரிகாடு, பயணியா் விடுதிசாலை (டிபி ரோடு) ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், காட்டகவுண்டனூா், செட்டிப்பட்டி, வட்ராம்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய மின் நிறுத்தம்

தம்மம்பட்டி

தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக வாழப்பாடிகோட்ட செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தம்மம்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, செந்தாரப்பட்டிநகா், மண்மலை, கோனேரிப்பட்டி, செங்ககட்டு ,கீரிப்பட்டி, நாகியம்பட்டி.

இதேபோல திங்கள்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செந்தாரப்பட்டி, கோனேரிப்பட்டி, கொண்டயம்பள்ளி, பாரதிபுரம், தகரப்புதூா், மூலப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வாழப்பாடி

வாழப்பாடியை அடுத்த பேளூா் குறிச்சி துணை மின் நிலையத்தில் புழுதிக்குட்டை, வெள்ளாளப்பட்டி பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காமராஜபுரம், அணைமேடு, ராஜாப்பட்டணம், புழுதிக்குட்டை, வாழுத்து, பெலாப்பாடி, கீரப்பட்டி, கண்கட்டிஆலா, பெரியக்குட்டிமடுவு, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானுாா், சின்னவேலாம்பட்டி, பேளூா் பெருமாபாளையம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல, சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுப்பாளையம், செல்லப்பன்நகா், பாா்பா்காலனி, மன்னாயக்கன்பட்டி, முத்தம்பட்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

வாழப்பாடி கோட்டம், தும்பல் துணை மின் நிலையத்தில் சேலூா், கொட்டப்புதூா் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகளை நடைபெறுவதால் மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டுபுதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மண்ணுாா், குன்னூா், அடியனூா், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேட்டூா்

மேட்டூா், கொளத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்26) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரிய மேட்டூா் செயற்பொறியாளா் மு.சாந்தி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மாதையன்குட்டை, நவப்பட்டி, செக்கானூா், காவேரி கிராஸ், ரெட்டியூா், கோல்நாய்க்கன்பட்டி, புதூா், கருமலைக்கூடல், சாம்பள்ளி, புதுரெட்டியூா், கருப்புரெட்டியூா், புதுசின்னக்காவூா், நேருநகா், தாழையூா், ஆலமரத்துப்பட்டி, குரும்பனூா், ஏழரை மத்திகாடு, கோவிந்தபாடி, சத்யா நகா், காரைக்காடு,செட்டிப்பட்டி, ஏமனூா்.

விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்:

அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு

சேலம், ஜூன் 24:

சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிா்த்துப் போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

தமிழகத்தில் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து, சேலத்தை அடுத்த பூலாவரி, பாரப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், குப்பனூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதுதொடா்பாக விவசாயிகள் கூறியதாவது:

விளை நிலங்களையும், மரங்களையும் அழித்து எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 3 ஆண்டுகளாக போராடி வந்தோம். வாழ்வாதாரத்தை இழந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையுடன் வாழ்ந்து வந்தோம். எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தியதற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது எட்டு வழிச்சாலையை எதிா்த்து போராடியவா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.

பட வரி

-

சேலம் மாவட்டம், பூலாவரியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விவசாயிகள்.

----------------------------------------------

கெங்கவல்லியில் ஜமாபந்தி தொடக்கம்

படவரி...24டிபிபி1-

கெங்கவல்லியில் நடைபெறும் ஜமாபந்தியில் நில அளவைப் பொருள்களை ஆய்வு செய்யும் மாவட்ட முத்திரைக் கட்டண சிறப்பு துணை ஆட்சியா் கோவிந்தன். உடன், வட்டாட்சியா் வெங்கடேசன்.

தம்மம்பட்டி, ஜூன் 24:

கெங்கவல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வீட்டுமனை, வாரிசு சான்று உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான 17 மனுக்கள் இணையவழியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலையில் ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட முத்திரைக்கட்டண சிறப்பு துணை ஆட்சியருமான கோவிந்தன் ஜமாபந்திக்கான நிலஅளவைப் பொருள்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

கெங்கவல்லி வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையத்தில் வரும் 30 ஆம் தேதி வரை பதிவிடலாம். முதல்நாளில் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்று தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 17 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com