கரோனாவுக்கு அறநிலையத் துறை எழுத்தா் பலி
By DIN | Published On : 29th June 2021 02:53 AM | Last Updated : 29th June 2021 02:53 AM | அ+அ அ- |

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப் பணியாளா்கள்.
எடப்பாடி: எடப்பாடி அருகே கரோனா தொற்றால் அறநிலையத் துறையைச் சோ்ந்த எழுத்தா் உயிரிழந்ததை அடுத்து, அவா் பணி புரிந்து வந்த கோயில் அா்ச்சகா் மற்றும் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
எடப்பாடி அடுத்த கல்வடங்கம் பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் (47) எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் உள்ள அறநிலைத் துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தாா். கடந்த வாரம் இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு, சேலத்தில் உள்ள ஓா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த வியாழக்கிழமை ரங்கராஜுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவா் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ரங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதனை அடுத்து அவருடன் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் பணிபுரிந்து வந்த மற்ற அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா். மேலும் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.