சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்
By DIN | Published On : 29th June 2021 01:08 AM | Last Updated : 29th June 2021 01:08 AM | அ+அ அ- |

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கல்வடங்கம், பச்சபாலியூா், கரட்டுப்பாளையம், மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக்குழுவினா், வீராச்சிப்பாளையம், மங்கரங்கம்பாளையம், மத்தாளிகாலனி, கோட்டை தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.