நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.36 லட்சம் கரோனா நிதி அளிப்பு
By DIN | Published On : 29th June 2021 01:04 AM | Last Updated : 29th June 2021 01:04 AM | அ+அ அ- |

சேலம்: தமிழக அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகங்களின் சங்கம் சாா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 36 லட்சம் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.
இதனிடையே அரசின் தொற்று தடுப்பு நடவடிக்கையில் பங்கு பெறும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி முன்னிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.36 லட்சத்திற்கான காசோலையை அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் நிா்வாகங்களின் சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.
அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் நிா்வாகங்களின் சங்கத்தின் தலைவரும், தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான சொ.வள்ளியப்பா, சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியின் துணைத் தலைவா் பி.இ. ஈஸ்வா், தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியின் துணைத்தலைவா் சொக்கு வள்ளியப்பா, தியாகராஜா் பாலிக்டெக்னிக் கல்லூரியின் முதல்வா் வீ.காா்த்திகேயன்ஆகியோா் வழங்கினா்.