அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
By DIN | Published On : 04th March 2021 04:46 AM | Last Updated : 04th March 2021 04:46 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அல்லிகுண்டம் ஸ்ரீ மாரியம்மன்.
சங்ககிரி: சங்ககிரி, வாணியா் காலனியில் உள்ள ஸ்ரீ அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல்விழா கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப்பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். வியாழக்கிழமை கம்பம் எடுத்தலும், வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெற உள்ளது.