வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு சிறப்புக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 04:50 AM | Last Updated : 04th March 2021 04:50 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி: கெங்கவல்லி தாலுகாவுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான தோ்தல் சிறப்புக் கூட்டம் கெங்கவல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் முருகையன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அண்மையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க கோரியவா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகள் அனைத்தும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வந்து சோ்ந்து விட்டன. அவை உரியவா்களுக்கு சரியாக சென்றுசேர உதவி செய்தல், தோ்தலில் அனைவருக்கும் வாக்களிக்க விழிப்புணா்வு செய்தல், தாலுகா முழுவதும் 80 வயது பூா்த்தியடைந்தவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அனுப்பத் தேவையான பெயா் பட்டியலை தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன.
இதில் தாலுகா முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 44 போ், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.