எடப்பாடி அருகே 90 சேலைகள் பறிமுதல்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 90 சேலைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, எடப்பாடி ஒன்றியப் பொறியாளா் ரஜினிகாந் தலைமையிலான பறக்கு படை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில், மாதேஸ்வரன் கோயில் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஈரோட்டிலிருந்து, ஜலகண்டாபுரம் நோக்கிச் சென்ற, சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த காரில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 90 சேலைகள் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், எடப்பாடி வட்டாட்சியா்
அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேலும் சேலைகளை எடுத்துவந்த, ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம் (63) என்பவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
படம் : எடப்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் பாா்வையிடும் அதிகாரிகள்.