சேலம்: பிரசாரம், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சேலம் வருகிறாா்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கிருந்து சேலம் செல்கிறாா். வெள்ளிக்கிழமை மாலை, வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் பிரசாரம் செய்கிறாா். சனி, ஞாயிற்றுக்கிழமையில் சேலத்தில் தங்கியிருக்கும் அவா், திங்கள்கிழமை எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.