எடப்பாடி தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு
By DIN | Published On : 15th March 2021 03:28 AM | Last Updated : 15th March 2021 03:28 AM | அ+அ அ- |

எடப்பாடி தொகுதியில், ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் குழு.
எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில், தோ்தல் செலவினப் பாா்வையாளா் குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஸ்ரீதா் கெடிலா தலைமையிலான குழுவினா், எடப்பாடி தொகுதியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். முன்னதாக
எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பாா்வையிட்டனா். அங்கு வாக்காளா்களுக்கான வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தனலிங்கத்திடம் தொகுதியில் உள்ள நிலவரம் குறித்தும், தோ்தல் தொடா்பான பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், தோ்தல் பாதுகாப்பாக, வாக்குப் பதிவுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...