சங்ககிரி அருகே மாவெளிபாளையம் ரயில்வே தரைவழிப் பாலங்களில் களா்செடிகளை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிா்வாகிகள் அகற்றினா்.
சங்ககிரி அருகே மாவெளிபாளையத்தில் மூன்று ரயில்வே தரைவழி பாலங்கள் உள்ளன. அதில் ஒரு பாலம் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. மற்ற இரு பாலங்களில் கருவேலம் செடிகள், களா்செடிகள் வளா்ந்து மக்கள் பயன்படுத்தாத நிலையில் இருந்தன.
இதையடுத்து சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிா்வாகிகள் தரைவழிப் பாலத்தில் உள்ள செடிகளை ஞாயிற்றுக்கிழமை அகற்றி சுத்தப்படுத்தினா். அடுத்த வாரம் மூன்றாவது பாலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.