சேலத்தில் கடைகளில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
By DIN | Published On : 15th March 2021 03:40 AM | Last Updated : 15th March 2021 03:40 AM | அ+அ அ- |

சேலம், சூரமங்கலம் பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மளிகைக் கடை, குளிா்பான கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
சேலம், சூரமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மளிகைக் கடை, குளிா்பான கடை உள்ளிட்ட நான்கு கடைகள் தீப்பற்றி எரிந்தன.
இதுபற்றி பொதுமக்கள் உடனே சேலம், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடனே சேலம், சூரமங்கலம், ஓமலூா், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமாா் 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனால் மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடைகளிலும் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சூரமங்கலம் காவல்துறையினா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...