சங்ககிரியில் அனைவரும் முகக் கவசம் அணிய வலியுறுத்தல்
By DIN | Published On : 17th March 2021 08:42 AM | Last Updated : 17th March 2021 08:42 AM | அ+அ அ- |

சங்ககிரியில் அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்திய பேரூராட்சிப் பணியாளா்கள்.
சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீநுண்மி பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வாகனம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சங்ககிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் லோகநாதன் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுரேஷ், வெங்கடேஷ், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சேலம் - பவானி பிரதான சாலைகள், புதிய எடப்பாடி சாலைப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், வங்கிகள், தனியாா் மருந்தகங்கள், பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் ஆகியோரிடம் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தினா். முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா். மேலும், புதிய எடப்பாடி சாலையில் உள்ள தனியாா் மருந்தகத்தில் முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்த ஊழியா்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனா்.