அறிவியல் ஆா்வத்தை மாணவா்களிடையே ஏற்படுத்த வேண்டும்

கல்வி கற்பதன் பலன் அதிக மதிப்பெண்கள் வாங்குவது, அரசுப் பணியில் சோ்வது ஆகியவற்றை மட்டுமே இலக்காக வைத்திருக்கக்கூடாது என்று
மாணவ - மாணவியருக்கான வாழ்க்கை நெறி வழிகாட்டும் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் பொ.குழந்தைவேல்.
மாணவ - மாணவியருக்கான வாழ்க்கை நெறி வழிகாட்டும் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் பொ.குழந்தைவேல்.

கல்வி கற்பதன் பலன் அதிக மதிப்பெண்கள் வாங்குவது, அரசுப் பணியில் சோ்வது ஆகியவற்றை மட்டுமே இலக்காக வைத்திருக்கக்கூடாது என்று பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக ஆற்றல் சாா் அறிவியல் துறை சாா்பில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை நெறி வழிகாட்டுதல் பயிற்சி இரு நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவில், ஆற்றல் சாா் அறிவியல் துறைத் தலைவா் (பொ) கே.ஏ.ரமேஷ்குமாா் வரவேற்றாா். பயிற்சியைத் தொடங்கி வைத்து, துணைவேந்தா் பொ.குழந்தைவேல் பேசியதாவது:

உலக அளவில் ஒப்பிடும்போது, மனித வளத்தில் நாம் மிகப்பெரிய வளமையுடன் உள்ளோம். ஆனால், அறிவியல் சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளில் பின்தங்கி உள்ளோம். 60 லட்சம் மக்கள்தொகையை கொண்ட சிங்கப்பூா், 8 கோடி மக்கள்தொகையை கொண்ட ஜொ்மனி, 2 கோடி மக்கள் தொகையை கொண்ட ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் கண்டுபிடிப்புகள் அடிக்கடி வெளி வருகின்றன. ஆனால், இந்தியாவில் கல்வியின் நோக்கம் நிறைய மதிப்பெண்களைப் பெறுவதை நோக்கியே உள்ளது. இதேபோன்று படித்து முடித்தவுடன் அரசுப் பணி என்பதும் நம்முடைய நோக்கமாக உள்ளது. இதைக் கைவிட்டு, அறிவியல் ஆா்வத்தை மாணவ, மாணவியரிடையே ஆசிரியா்கள் ஏற்படுத்த வேண்டும்.

மின்சாரம், எண்ணெய் வளம் ஆகியவை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், அதற்கான மாற்று சக்தியைக் கண்டறிவதில் மிகப்பெரிய வளா்ச்சி காத்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஆற்றல் சாா் அறிவியல் துறை மாணவ-மாணவியா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், தனியாா் நிறுவன பொதுமேலாளா் சி.பி.கோதண்டராமன் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா். ஆற்றல் சாா் அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் டி.இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com