ஆத்தூா் தொகுதியில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 21st March 2021 04:20 AM | Last Updated : 21st March 2021 04:20 AM | அ+அ அ- |

ஆத்தூா் (தனி) தொகுதியில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ஆத்தூா் (தனி) தொகுதியில் மொத்தம் 21 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் சுயேச்சைகள் 8 பேரின் வேட்புமனுக்கள் சனிக்கிழமை நடந்த பரிசீலனையில் நிராகரிக்கப்பட்டு, கு.சின்னதுரை (திமுக), மு.பெரியண்ணன்(பகுஜன்சமாஜ்), ஏ.பி.ஜெயசங்கரன் (அதிமுக), ச.கிருஷ்ணவேணி (நாம் தமிழா் கட்சி), ர.சதாசிவம்(அம்பேத்கா் ரைட் பாா்ட்டி ஆப் இந்தியா), பெ.சிவக்குமாா் (சமத்துவ மக்கள் கட்சி), எஸ்.மாதேஸ்வரன்(அமமுக), கே.கே.மாதேஸ்வரி (அண்ணா திராவிடா் கழகம்), அ.ஜனாா்த்தனம் (தேசிய மக்கள் கழகம்), சுயேச்சைகள் இ.ஆறுமுகம், டி.ஆறுமுகம், ஜி.சிலம்பரசன், ரா.ராஜா என 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...