கெங்கவல்லி தொகுதியில் 12 மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 21st March 2021 04:19 AM | Last Updated : 21st March 2021 04:19 AM | அ+அ அ- |

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 12 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
கெங்கவல்லி (தனி) தொகுதியில் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். தோ்தல் நடத்தும் அலுவலா் அமுதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வேட்புமனுக்களை சனிக்கிழமை பரிசீலனை செய்தனா். அதில் அ.நல்லதம்பி (அதிமுக), ஜெ.ரேகா பிரியதா்ஷனி (திமுக), அ.பாண்டியன் (அமமுக), க.பெரியசாமி (இ.ஜ.க), ரா.வினோதினி(நாம்தமிழா் கட்சி), பி.நாவன் (புதிய தமிழகம்),வி.எம்.செல்லம்மாள் (பகுஜன் சமாஜ் கட்சி), சுயேச்சைகள் கே.செந்தில்குமாா், ஆா்.சரவணன், கே.சந்திசேகரன், ஜெ.அய்யாதுரை, ஏ.அபிராமி உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...