

ஓமலூா் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் புதன்கிழமை வீதி வீதியாக சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
பொம்மியம்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவா், டேனிஷ்பேட்டை, வடகம்பட்டி, ராமமூா்த்தி நகா், லோக்கூா் உள்ளிட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.
இதனைத் தொடா்ந்து காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும் வீதி வீதியாகச் சென்ற அவா், தனது தந்தை வழியில் மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளதாகவும், அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவையும்,ஆசையும் தனக்கில்லை என்பதால் ஓமலூா் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்ற உழைப்பேன் என்று கூறி வாக்கு சேகரித்தாா். அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.