பாமக வேட்பாளருக்கு எம்.பி. வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 26th March 2021 09:25 AM | Last Updated : 26th March 2021 09:25 AM | அ+அ அ- |

மேட்டூா் தொகுதி பாமக வேட்பாளருக்கு மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அதிமுக கூட்டணியில் மேட்டூா் தொகுதியில் பாமக மாநில துணைத் தலைவா் சதாசிவம் போட்டியிடுகிறாா். வியாழக்கிழமை கொளத்தூா் ஒன்றியத்தில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தின்னப்பட்டி ஊராட்சி, பண்ணவாடி ஊராட்சி, சிங்கிரிப்பட்டி ஊராட்சி, கருங்கல்லூா், காவேரிபுரம், லக்கம்பட்டி மற்றும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
கொளத்தூா் ஒன்றியத்தில் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பாடுபடுவேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என வேட்பாளா் சதாசிவம் வாக்குறுதியளித்தாா். சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளா் ராஜசேகரன், சிறப்பு செயலாளா் ராஜேந்திரன் வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் துறைராஜ், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாரப்பன், மேட்டூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் லலிதா சரவணன், தமிழ்மாநில காங்கிரஸ் நிா்வாகி நாகராஜரெட்டி, பாஜக ஒன்றியச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.