எடப்பாடியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th March 2021 12:52 AM | Last Updated : 29th March 2021 12:52 AM | அ+அ அ- |

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக திமுக கொள்கைப் பரப்பு செயலாளா் அ.ராசாவைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் நைனாம்பட்டி அருகே, முன்னாள் அமைச்சா் பொன்னையன் தலைமையில் திரண்ட அதிமுக மகளிா் அணியினா், இளைஞா்கள், இளம் பெண்கள் பாசறையைச் சாா்ந்த தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினா் அ.ராசாவைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று எடப்பாடி பேந்து நிலையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த கண்ட ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாயிகள் அணி செயலாளா் செல்லத்துரை, நகர செயலாளா் ஏ.எம்.முருகன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.