கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மைத்தில் பருத்தி ஏலம்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 450 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 450 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகளை, கூட்டுறவு அலுவலா்கள் 125 குவியல்களாகப் பிரித்து பொது ஏலம் விட்டனா். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ. 7,500 முதல் ரூ. 9,090 வரை விற்பனையானது. பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 6,250 முதல் ரூ. 7,070 வரை விற்பனையானது.

நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 8.75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. தற்போது பருத்தி அறுவடை குறைவு, கரோனா பரவல், பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான பருத்தி மூட்டைகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com